Latestமலேசியா

தேசிய பஜன் விழா & பஜன் போட்டி 2019 – விண்ணப்பத்திற்கான இறுதி நாள் செப்டம்பர் 17

கோலாலம்பூர், செப் 10 –  2019ஆம் ஆண்டுக்கான தேசிய பஜன் & விழா பஜன் போட்டிக்கான முதல் தகுதிச் சுற்று எதிர்வரும் அக்டோபர் 12 மற்றும் 13ஆம் திகதி நடைப்பெறவுள்ள வேளை இதன் இறுதிச் சுற்று அக்டோபர் 19ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
மலேசிய இந்து இயக்கங்கள் மற்றும் ஆலய ஒருங்கிணைப்பு குழு, அருளொளி சங்கீர்த்தனம், சர்வதேச இந்து கூட்டமைப்பு ஆகியவையின் கூட்டு முயற்சியில் இப்போட்டி நடத்தப்படவுள்ளது.

முதல் பரிசாக 10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசும் & விமான டிக்கெட்டுகளும் வழங்கப்படவுள்ளன. இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக தலா ஒவ்வொரு நிலைக்கும் 5000 ரிங்கிட் மற்றும் 3000 ரிங்கிட் ரொக்கப் பரிசோடு, இசை வாத்தியங்களும் வழங்கப்படும்.

குழு போட்டியான இதில் ஆர்வமுள்ள 12 வயது முதல் 40 வரை வரையில் உள்ளவர்கள் இதில் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பத்திற்கான இறுதி நாள் 17 செப்டம்பராகும்.
மேல் விவரங்களுக்கு +601126406910 எனும் எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம். 

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker