Latestமலேசியா

புதிய வகை திலாப்பியா மீன் – கோழியை விட விலை குறைவு

ஜோர்ஜ் டவுன், செப். 10 – புதிய வகையிலான திலாப்பியா மீன் உருவாக்கப்பட்டுள்ளதால், சத்தான மீனைப் பெறுவதோடு கோழி இறைச்சியை விட குறைவான விலையிலும் கிடைக்கும் என மீன்வள ஆய்வுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக மீன்வளத் கழகத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் அந்தப் புதிய வகையிலான மீன் 50லிருந்து 80 விழுகாடு விரைவாக வளர்ச்சி யடையவும் பெருகவும் அதிக நாள்கள் உயிர் வாழவும் வாய்ப்பிருப்பதாக அதன் தலைமை இயக்குநர் கெரத் ஜோன்ஸ்டோன் தெரிவித்தார்.

இந்த வகையான மீன்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சத்தான உணவை, குறைந்த விலையில், பாதுகாப்பான, தேவைப்படும் அளவில் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் மீன் முக்கிய உணவாக இருப்பதாகவும் ஓராண்டில் தலா 57 கிலோ மீன் உணவாகக் கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker