Latestமலேசியா

மலாய் பாடல்களில் பாடிக் கலக்கும்- சந்தீஸ்

கோலாலம்பூர், செப். 10 – அமாலினா எனும் மலாய் மொழிப் பாடலைப் பாடிய சந்தீஸ் தமது பாடலை யூ டியூப்பில் 30 லட்சம் பேர் கண்டிருப்பதைப் பெருமையாக நினைக்கிறார்.

அந்த ஆல்பம் வெளியிடப்பட்டபோது 1 மில்லியன் பேர் அதனை கேட்ட பின்னர், இரு வாரத்திற்குப் பின்னர் 3 மில்லியன் பேர் கேட்டிருப்பது அவருக்கு பெரும் வெற்றி என பாராட்டப்படுகிறார்.

சிறு வயதிலிருந்தே இசையில் நாட்டம் கொண்ட சந்தீஸ் இந்தியர்களின் கலை நிகழ்ச்சிகளில் பாடிய அனுபவத்தைக் கொண்டு 2011இல் வானவில் சூப்பர்ஸ்டார் போட்டியில் கலந்து இறுதி நிலை வரை சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவரின் நான் வேணுமா, அப்பா வேணுமா என்ற இசை ஆல்பம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2013 அதற்கு மலேசிய இந்திய இசை தொழில்துறையின் விருதினைப் பெற்றது.

அவரின் திறமையினைக் கண்ட ஹேர்ரி கலீபா அமாலினா எனும் ஆல்பத்தைத் தயாரிக்க அவரை நாடினார்.

அந்த ஆல்பத்தின் வெற்றிக்குப் பின்னர் அவர் பல நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பாடி நல்ல பெயரை எடுத்து வருகிறார். பல இசை போட்டி நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து பரிசுகளையும் வென்று அத்துறையில் தமது பெயரைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker