உலகம்

விக்ரம் லேண்டருடன் தொடர்புக் கொள்ளும் முயற்சியில் இஸ்ரோ

செப் 10 – சந்திராயன் இரண்டின் விக்ரம் லேண்டர் காணாமல் போய் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனுடன் தொடர்புக் கொள்ளும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக முயற்சித்து வருகிறது என இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், தற்பொழுது அதிக தகவல் தெரிவிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜூலை 22ஆம் திகதி விண்ணுக்கு பாய்ச்சப்பட்ட சந்திராயன் இரண்டு விண்கலத்திலிருந்து செப்டம்பர் 2ஆம் திகதி அதிலிருந்து பிரிந்து விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி பயணித்தது.

செப்டம்பர் 7ஆம் நிலவில் தரையிறங்கவிருந்த சில நிமிடங்களில் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் மட்டுமே இருக்கும் சமயத்தில் அதன் தொடர்பு துண்டானது என்பது குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker