Latestஇந்தியா

விநாயகர் சிலை கரைப்பு:- ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி!

பெங்களூரூ,செப்.10- கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கவயலில் விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்திக்காக செய்யப்பட்ட சிலைகள் எல்லாம் நாடு முழுக்க நேற்று முதல் நாளில் இருந்து கரைக்கப்பட்டு வருகிறது.அதன்படி சென்னையில் நேற்று முதல்நாள் மெரினாவில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் இந்த சிலை கரைப்பு விழா நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான் கர்நாடகாவில் விநாயகர் சிலை கரைப்பின் போது சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கவயலில் விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker