Latestமலேசியா

21 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் – அடுத்தாண்டு மூடப்படும்

கோலாலம்பூர், செப். 10 – நாட்டில் உள்ள 27 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் 21 அடுத்தாண்டு முதல் படிப்படியாக மூடப்படும் என தெரிகிறது.

அரசின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு அந்த முடிவானது அக்டோபர் 11இல் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் 10 கல்லூரிகள் அரசின் ஊழியர்களுக்கான பயிற்சி நிலையங்களாகத் தரம் மாற்றப்படும். மீதமுள்ள 11 கல்லூரிகள் பொது பயிற்சி நிலையங்களாகவும் அல்லது வேறு திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

இது சம்பந்தமாக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் தலைவர்களுக்கு இத்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்படும் கல்லூரிகளில் கோலாலம்பூர் பந்தாயில் உள்ள மலாய் மற்றும் அனைத்துலக மொழி கல்லூரியும் செராசில் உள்ள சிறப்புத் திறன் கல்லூரியும் அடங்கும் என நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவித்தது.

இதனிடையே, நாட்டின் பல்கலைக்கழகங்களே ஆசிரியர் பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதிருக்கும் ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் தொழில் பாதிப்படையக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker