Latestஇந்தியாமலேசியா

MH370 மாயம் – சென்னையில் வழக்கு பதிந்த ஆடவர்; ரத்து செய்த நீதிபதி.

சென்னை, செப் 10 – கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கை நோக்கி பயணித்த MH370 விமானம் 12 விமான ஊழியர்கள், 227 பயணிகள் என மொத்தம் 239 பேருடன் காணாமல் போனது. விமான வரலாற்றிலேயே அவிழ்க்க முடியாத மர்மமாக இருக்கும் MH370 மாயம் தொடர்பாக அதனை கண்டுபிடிக்க அறிவியல் ரீதியான விசாரணை நடத்தக் கோரி நபர் ஒருவர் வழங்கிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2014 மார்ச் 8 ம் தேதி திருவனந்தபுரம் அந்தோணியார் கோவில் அருகிலிருந்த போது, விமானம் ஒன்று கடலில் விழுந்ததைப் பார்த்தாகவும், விமானம் மாயமானது தொடர்பாக அறிவியல் ரீதியான விசாரணையை நடத்த உத்தரவிட வேண்டும் என, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிஜு குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தை எப்படி சென்னை உயர்நீநிமன்றத்தில் வழக்காக தொடர முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மலேசிய நாட்டின் தூதரகம் சென்னையில் இருப்பதால், இங்கு வழக்கு தொடர்ந்திருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

விமானம் மாயமாகி 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அதுகுறித்த எந்த ஒரு தகவலும் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் அவ்வப்போது வெளிவரும் இம்மாதிரியான செய்திகள் MH370னை நமது நினைவில் நிறுத்திக் கொண்டே இருக்கின்றன

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker