Latestமலேசியா

ஃபார்ஹாஸ் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் விடுவிப்பு

கோலாலம்பூர், செப். 11 – பேரா பிகேஆர் தலைவரும் அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளருமான ஃபார்ஹாஸ் வாஃபா சல்வடோர் அம்பாங் போலீஸ் நிலையத்தில் சுயமாக சரணடைந்தார்.

ஆயுதம் தாங்கித் தாக்குதல் நடத்தியது சம்பந்தமான விசாரணைக்காகத் தேடப்பட்ட அவர், விசாரணையில் ஒத்துழைப்பைத் தந்ததாக சிலாங்கூர் கிரிமினல் புலனாய்வு தலைவர் ஃபாசில் அகமட் தெரிவித்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதோடு சிறுநீர் சோதனையும் நடத்தப்பட்டது. வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், மாலை 5 மணிக்கு அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆகஸ்டு 31ஆம் தேதி வாபா சல்வடோர் தமது 14 நண்பர்களுடன் அம்பாங் ஸ்போர்ட்ஸ் காம்ளக்சில் நபர் ஒருவரைத் தலைக்கவசம், கத்தி, நாற்காலிகளைக் கொண்டு தாக்கிக் காயம் விளைவித்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker