Latestமலேசியா

உண்மையை மறைக்காமல் பேச வேண்டும் மஸ்லி – நஜிப் சாடல்

கோலாலம்பூர், செப். 11 – கல்வி அமைச்சர் உண்மையை மறைத்து பொய்யான செய்தியை வெளியிடுவதாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சாடினார்.

நாட்டிலுள்ள 27 ஆசிரியர் பயிற்சி மையங்களில் 21ஐ மூட தேசிய முன்னணி அரசுதான் திட்டமிட்டதாகக் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் குறிப்பிட்டுள்ளது உண்மைக்கு மாறானது, அதில் கிஞ்சிற்றும் உண்மை இல்லை என நஜிப் ரசாக் குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது, 9 ஆசிரியர் பயிற்சி மையங்களைப் போலிடெக்னிக்குளாகவும் தொழில்திறன் பயிற்சி கல்லூரிகளாக மாற்றப்படும் என்றும் 4 பயிற்சி மையங்களை போலிடெக்னிக்குகளாகவும் 4 மையங்களைத் தொழில்திறன் பயிற்சி மையங்களாகவும் ஒன்று டிவிஇடி பயிற்சி மையமாகவும் மாற்றப்படும் என அறிவித்ததாகக் குறிப்பிட்டார்.

ஆனால், தாம் ஒருபோதும் அவை மூடப்படும் என அறிவிக்கவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.

இது சம்பந்தமான ஊடகச் செய்திகளை முழுமையாக அறிந்து மஸ்லி மாலிக் பேச வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

பக்காத்தான் அரசு தன்மூப்பாக எதையும் செய்து, தேசிய முன்னணி அரசைக் குற்றம் சாட்டுவதையே குறியாகக் கொண்டு செயல்படுவதாகவும் கல்வி அமைச்சராக இருக்கும் ஒருவர் இதற்கு முன் என்ன நடந்தது என்பதைத் தெரிந்தும், வேண்டுமென்றே அதனை மறைத்துப் பேசுவது அழகல்லவென்றும் நஜிப் சாடினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker