Latestமலேசியா

எவரெஸ்ட் சிகரத்தின் கீழ்தள முகாமில் ஜாலுர் கெமிலாம் பறக்க விடப்பட்டது

கோலாலம்பூர், செப். 11 – 20 மலேசியர்களும் 6 புரூணைக்காரர்களும் சேர்ந்து எவரெஸ்ட் சிகரத்ததின் கீழ்தள முகாமில் தேசிய கொடியை பறக்கவிட்டனர்.

இந்நிகழ்ச்சி நேற்று காலை 10.30 மணியளவில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.05 மணியளவில் நிகழ்ந்தது.

62ஆவதே தேசிய தினத்தை ஒட்டி, 12 மீட்டருக்கு 6 மீட்டர் எனும் அளவு கொண்ட 11 கிலோ எடையிலான அந்தப் பெரிய தேசியக் கொடி அங்கு பறக்க விடப்பட்டது.

அந்தக் குழுவினர் நேப்பாலில் உள்ள லூக்கா எனும் இடத்திலிருந்து 65 மிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோராக் செப்பி எனுக் இடத்திற்கு செல்ல 9 நாள்கள் பிடித்தது.

அந்தக் குழுவில் நடிகர் அஷான் ரானி உட்பட பெரித்தா ஹரியான், பெர்னாமா, கோஸ்மோ பத்திரிகைகளின் அதிகாரிகளும் இருந்தனர்.

அந்த 16 நாள் பயணமானது சம்மிட் எட்டேக் ரிசொர்சஸ் அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker