Latestமலேசியா

கிளந்தான் போதைப்பொருள் தலைவன் – உம்ராவுக்குச் செல்லும்போது கைது

கோலாலம்பூர், செப். 11 – மெக்காவுக்குச் செல்லவிருந்த கிளந்தான் போதைப்பொருள் தலைவன் என நம்பப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த 37 வயதான நபர் சவூதி, மெக்காவுக்குச் செல்வதற்காக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்தபோது வியாழக்கிழமையன்று கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் புலனாய்வு இலாகா தலைவர் முகமட் காலில் காதர் முகமட் தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக அந்த நபரின் கூட்டாளிகளான 19லிருந்து 53 வயதான 3 பேர் பாசிர் மாஸ், குபாங் குவார், ஜாலான் லூபுக் கியாட்டில் பிற்பகல் 12 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

பெரோடுவா காரில் 10.5 மில்லியன் ரிங்கிட் பெறுமான 77.61 கிலோ கொண்ட 700,000 குதிரை மாத்திரைகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் முன்னர் மாலை 5 மணிக்கு ஜாலான் யாக்குபியாவில் நடத்தப்பட்ட சோதனையில் 48 மாது ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மாநிலத்தில் பெரிய போதைப் பொருள் கும்பலாகக் கருதப்படும் அந்தக் கும்பல் கடந்தாண்டிலிருந்து செயல்பட்டு வந்துள்ளது.

அண்டை நாட்டிலிருந்து தருவிக்கப்படும் அந்தப் போதைப்பொருள் மொத்தமாகவும் சில்லரையாகவும் உள்நாட்டில் விற்கப்பட்டு வந்துள்ளது.

கைதான அனைவரும் 7 நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டு 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் வழி விசாரிக்கப்படுவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker