Latestமலேசியா

கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒரே நீர் விநியோகிப்பாளர் – ஆயர் சிலாங்கூர்

கோலாலம்பூர், செப். 11 – சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா வட்டாரங்களுக்கு ஒரே நீர் விநியோகிப்பாளராக ஆயர் சிலாங்கூர் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் வெள்ளிக்கிழமை யிலிருந்து அமலுக்கு வருமென சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

தனியார் நீர் விநியோகிக்கும் நிறுவனங்களான புஞ்சாக் நியாகா(பிஎன் எஸ்பி), ஷாரிகாட் பெக்ககாலான் ஆயர் சிலாங்கூர்(ஸ்பாஸ்), கோன்சோர்டியம் அபாஸ், கோன்சோர்டியம் ஆயர் சிலாங்கூர்(கேஏஎஸ்பி), மற்றும் ஷாரிகாட் பெங்கெலுவாரான் ஆயர் சிலாங்கூர் (ஸ்பிளாஸ்)ஆகிய நிறுவங்களை ஆயர் சிலாங்கூர் கையகப்படுத்திக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் மற்ற நிறுவனங்களின் செயல்பாடு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

சிலாங்கூர் நீரின் கட்டணம் சம்பந்தமாக நீர், நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சர் சேவியர் ஜெயகுமார் கவனித்துக் கொள்வார் என அமிருடின் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker