Latestமலேசியா

சிசு உணவக மேசையில் – கைவிடப் பட்டிருந்தது

ஈப்போ, செப். 11 – புதிதாகப் பிறந்த சிசு ஒன்று தஞ்சோம் மாலிம், ஜாலான் மெந்தாகாப்பில் உள்ள உணவகத்தின் மேசையில் கைவிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த சுசுவை 80 வயது முதியவர் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் கண்டுபிடித்ததாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் வான் கமா ருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.

மாக்ரிப் தொழுகைக்குப் பின்னர், அந்த முதியவர் தமது மகளின் உணவகத்துக்குச் சென்றபோது அந்த 2.34கிலோ எடை கொண்ட சிசுவானது துண்டு ஒன்றினால் சுற்றப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த சிசு நலமாக இருப்பதாகவும் தற்போது சிலிம் ரிவர் மருத்துவமனையில் அணுக்கக் கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker