Latestமலேசியா

தங்கக் கட்டிகளைக் கடத்த முயன்ற மலேசிய மாது – சென்னையில் கைது

புதுடில்லி, செப். 11 – 133,000 ரிங்கிட் பெறுமான தங்கக் கட்டிகளைக் கடத்த முயன்ற மலேசிய பெண் சென்னை விமான நிலையத்ததில் கைது செய்யப்பட்டார்.

40 வயதான அந்த மாது திங்கட்கிழமை 133,700 ரிங்கிட் பெறுமான 582 கிராம் சுத்தமான தங்கத்தைக் கடத்த முயன்றதாக இந்திய போலீசார் தெரிவித்தனர். அவர் செவ்வாய்க்கிழமை காலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மாது விசாரணைக்குப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக சென்னையில் உள்ள தூதரகப் பேராளர் கே.சரவணன் தெரிவித்தார்.

ஆகஸ்டு மாதம் 6.5 கிராம் கொண்ட 12 தங்கக் கட்டிகளைக் கடத்த முயன்ற நபரும் 1.34 மில்லியன் பெறுமான வைரங்களைக் கடத்த முயன்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker