Latestசினிமா

தாயையும் சகோதரியையும் பார்த்த மகிழ்ச்சி:- உச்சத்தில் முகேன்

சென்னை,செப்.11- பிக்பாஸ் வீட்டில் காதல், மோதல், காமெடி என அனைத்து அம்சங்களும் பார்த்துவிட்ட நிலையில் அடுத்தகட்டமாக பார்க்க வேண்டியது உணர்வு பூர்வ பாசமும் நேசமும் தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்த சீசன் டைட்டில் ரேஸில் அவரும் உள்ளார்.

அதனை பூர்த்தி செய்ய இன்று முதல் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர். முதல்கட்டமாக முகினின் தாயார் மற்றும் சகோதரியுடன் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர்.

அம்மாவையும் சகோதரியையும் பார்த்த முகேன், சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்று மகிழ்ச்சியில் அவர்களை தூக்கி வைத்து கொஞ்சுகிறார். இது மற்ற போட்டியாளர்களுக்கும் ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது

இதனிடையே இந்நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே அவரை காதலிப்பதாக அபிராமி வெங்கடாச்சலம் கூறிவநதார். ஆனால் அதை முகேன்ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகு அபிராமி வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்று அபிராமி முகேனின் அம்மாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker