Latestமலேசியா

பேரரசர் தம்பதியரின் ஓணம் நல்வாழ்த்துகள்

கோலாலம்பூர், செப். 11 – மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவும் ராஜா பெர்மைசுரி அகோங் துவாங்கு அஸிஸா அமினா மைமூனா இஸ்கண்டாரியா ஆகியோர் நாட்டின் அனைத்து மலையாள சமூகத்தவருக்கும் தங்களது ஓணம் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இஸ்தானா நெகாராவின் இன்ஸ்டாக்கிரேம் அகப்பக்கத்தில், மலையாள சமூகத்துக்குத் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையாளிகளின் அறுவடை தினமான ஓணம் பண்டிகை மலையாள காலண்டரில் சிங்கம் மாதத்தில் (ஆகஸ்டு-செப்டம்பர்) கொண்டாடப் படுகிறது.

இப்பண்டிகையானது மலையாலா சக்கரவர்த்தியை வரவேற்கும் பண்டிகையாகவும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker