Latestமலேசியா

மலேசிய சாதனைப் புத்தகத்தில் தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்

கோலாலம்பூர், செப்.11-மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள். தலைநகர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வ௫ம் தமிழ்ப் பேரவையின் “பேரவைக் கதைகள்” இன்று மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று புதிய சரித்திரம் படைத்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களால் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் பேரவைக் கதைகள் எனும் சிறுகதைப் போட்டி கடந்த 1982 ஆம் ஆண்டு, முதல் முயற்சியாகத் தொடங்கப்பட்ட வேளை, 1986 ஆம் ஆண்டில் தேசிய சிறுகதைப் போட்டியாக பரிணாமம் கண்டது.

அன்று முதல் இன்று வரை இச்சிறுகதைப் போட்டி தொய்வடையாமல், இன்றையத் தமிழ்ப் பேரவை செயலவையினால் தொடரப்பட்டு வ௫கிறது.

உலகிலேயே பொதுப் பல்கலைக்கழகம் ஒன்றில் இயங்கி வ௫ம் இந்திய மாணவ அணி ஒன்று தமிழ்ச் சிறுகதைப் போட்டியை நடத்தி, புத்தகமாக பதிப்பிக்கும் இலக்கியத் திட்டத்தை முன்னெடுக்கும் ஒரே மாணவ அணியாகத் தமிழ்ப் பேரவைத் திகழ்கிறது.

அந்த வகையில், மலேசியாவில் அதிகமான தமிழ்ச் சிறுகதைகளை வெளியிட்ட தமிழ்ப் பேரவையை அங்கீகரிக்கும் வகையில் இன்று, “பேரவைக் கதைகள்” சிறுகதைத் திட்டம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இச்சாதனைக்கான நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று மலேசிய சாதனைப் புத்தக நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய ஆய்வியல் துறை தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் கி௫ஷணன் மணியம், மாணவ நல அதிகாரி தி௫மதி விஜயமலர், தமிழ்ப் பேரவை தலைவர் சிவம் தமிழ்ச்செல்வம், இயக்குநர் திலாஷினி இராஜகோபால், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதனிடையே, எதிர்வ௫ம் 21/09/2019 மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேரவையின் 60ஆம் ஆண்டு வைரவிழாவும் 33ஆவது பேரவைக் கதைகள் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker