Latestமலேசியா

ஜமால் கஷ்யோகி இறக்கும் தருவாயில் என்ன பேசினார்? வீடியோ வெளியீடு

இஸ்தான்புல், செப். 12 – உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவ வேண்டுமென ஒலிக்கும் பதிவு ஒன்று சவூதி அரேபிய பத்திரிகையாளரின் மரணத்துக்கு முன்னர் பதிவு செய்திருந்த ஒலிநாடாவை துருக்கிய உளவுத் துறை வெளியிட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் செய்தியாளராகப் பணியாற்றிய ஜமால் கஷ்யோகி, தமது திருமண ஆவணங்களைப் பெற துருக்கியில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்துக்குச் செல்வதற்கு முன்னர், அந்த ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் அவரை சவூதிக்குக் கொண்டு செல்லவிருப்பதாக அந்நாட்டின் உளவுப் பிரிவின் மேதர் முத்ரெப், கசோகியின் மகனிடம் தான் நலமாக இருக்கும் செய்தியை அனுப்பும்படி நிர்பந்தித்ததாகப் பதிவில் காணப்படுகிறது.

நீங்கள் சவூதி அரேபியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டால் இறுதியில் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும், ஆகவே உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள் என சொல்லப்பட்டுள்ளது.

தூதரகத்துக்கு வந்த கஷ்யோகி போதைப்பொருள் கொடுக்கப்பட்ட பின்னர், வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரின் உடல் என்னவானது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker