Latestமலேசியா

பொய் செய்திக்கு எதிரான சட்டத்தை அகற்றும் முயற்சியை அரசாங்கம் தொடங்கும்.

கோலாலம்பூர் செப் 12 – எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் பொய் செய்திக்கு எதிரான சட்டத்தை ரத்துச் செய்யும் இரண்டாவது முயற்சியை அரசாங்கம் தொடங்கும்.  2018ஆம் ஆண்டின் பொய் செய்திக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்யும் சட்டத்திருத்தத்தை மக்களவை நிறைவேற்றிய போதிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேலவை அதனை நிராகரித்தது.

எதிர்வரும் அக்டோபர் 7ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும்போது இந்த சட்டத்திருத்தத்தை அரசாங்கம்  சமர்ப்பிக்கும் என பிரதமர் துறை அமைச்சர் லியு வெய் கியோங்  தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மேலவை அந்த சட்டத்திருத்தத்தை நிராகரித்த ஓராண்டுக்குப் பின்னர் இப்போது மீண்டும் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். சுவாகாம் எனப்படும் மனித உரிமை ஆணையத்தின் இருபதாம் ஆண்டு கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார். எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தில்  பொய் செய்திக்கு எதிரான சட்டத்தை ரத்துச் செய்யும்  திருத்தம் மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என  லியு சொன்னார்

அந்த சட்டத் திருத்தம் இன்னொரு முறை மக்களவையில் நிறைவேற்றப்பட்டால் மேலவை உறுப்பினர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்பதை  பொருட்படுத்தாமல் அந்த சட்டத் திருத்தம் இயல்பாகவே மேலவையில் அங்கீகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker