Latestமலேசியா

முஸ்லிம் அல்லாதவரின் பொருள் புறக்கணிப்பு – பொருளாதாரத்தைப் பாதிக்கும்

ஜோகூர் பாரு, செப். 14 – முஸ்லிம் அல்லாதவர்களின் பொருள்களைப் புறக்கணிப்பதால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் என விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்துறை அமைச்சர் சலாஹுடின் அயுப் சுட்டிக்காட்டினார்.

இந்தச் செய்கையினால் இனங்களுக்கிடையே பிளவுதான் ஏற் படும் என்றும் அதனால் யாரும் பயனடைய முடியாது.

முஸ்லிம்களுக்கு ஹலால் உணவு தேவைதான் ஆனால், அதனை காரணம் காட்டி முஸ்லிம் அல்லாதோரின் பொருள்களைப் புறக்கணிப்பதில் நியாயம் இல்லையென ஜோகூர் பாருவில் மூன்கேக் விழாவில் பங்கு கொண்டபோது சாலாஹுடின் குறிப்பிட்டார்.

டுரியான் பழங்களை மலாய்க்காரர்களும் சீனர்களும் பயிரிட்டு விற்கின்றனர். அதே வேளையில் இந்தியர்கள் காய்கறி பயிரிடுவதோடு பெரிய பெரிய மாட்டு, ஆட்டுப் பண்ணைகளை வைத்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

ஒவ்வொரு இனமும் மற்ற இனத்தவரின் பொருள்களைப் புறக்கணிப்பதால் யாரும் வெற்றியடைய முடியாது என அவர் எச்சரித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker