Latestமலேசியா

அம்னோ-பாஸ் உடன்பாடு – தீவிர இனவாத அரசியலுக்கு வித்திடும்

சுங்கை பூலோ, செப். 15 – நேற்று அம்னோவும் பாஸ் கட்சியும் ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டது, நாட்டில் தீவிர இனவாத அரசியலுக்கு வித்திடும் என சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அவர்களின் உடன்பாட்டு சாசனத்தின் மூலம் தீவிர இனவாத அரசியல் முன்னெடுக்கப்படும் என அமிருடின் அச்சம் தெரிவித்தார்.

அந்த உடன்பாட்டின் வழி அவர்கள் தீவிர இனவாதத்தைத் தூண்டி மக்களிடையே பிரிவினையைத் தோற்றுவிக்கக் கூடாது என தாம் எதிர்பார்ப்பதாக சிலாங்கூர் வீடமைப்புத் திட்டத்தில் 270 பேருக்கு வீடுகளை வழங்கும் நிகழ்ச்சியில் அமிருடின் அதனைத் தெரிவித்தார்.

நேற்று அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடியும் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் தலைநகர் உலக வாணிப மையத்தில் முஸ்லிம் ஒற்றுமை ஒன்றுகூடும் நிகழ்ச்சியில் ஒத்துழைப்பு சாசனத்தில் கையெழுத்திட்டனர்.

அடுத்த பொதுத்தேர்தலில் இரு கட்சிகளும் ஒத்துழைத்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தோடு அந்த சாசனம் கையெழுத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker