Latestமலேசியா

அம்னோ-பாஸ் உடன்பாடு – நஜிப், ஸாஹிட்டின் அரசியலுக்கு உதவவே!

கோலாலம்பூர், செப். 15 – நேற்று அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையே உடன்படிக்கை கையெழுத்திடப் பட்டது, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கும் அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடிக்கும் அரசியலில் நிலைத்திருக்க உதவும் என பிரிபூமி பெர்சத்துவின் உச்சமன்ற உறுப்பினர் ஏ.காடிர் ஜாசின் சுட்டிக்காட்டினார்.

அந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையைச் செய்து கொள்ள ஹாடி அவாங் முனைப்பு காட்டினாலும், அன்றைய தினத்தில் ஸாஹிட்டையே முன்னிலைப் படுத்தியது நஜிப்பையும் ஸாஹிட்டையும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தற்காக்கவே என காடிர் தெரிவித்தார்.

அந்த இருவரும் பல ஊழல் வழக்குகளைச் சந்தித்திருக்கும் வேளையில் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து தற்காக்கவே அது மேற்கொள்ளப்பட்டதாகவும் நஜிப் பல ஊழல் வழக்குகளை எதிர் கொண்டாலும், அதனை பொருட்படுத்தாமல் ஹாடி அவாங் நஜிப்புடன் நட்பு பாராட்டுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

1969ஆம் ஆண்டு தேசிய முன்னணியின் ஆட்சியில் பாஸ் பங்கு கொண்டு, அதனைச் சாதகமாகப் பயன்டுத்தி நாடு முழுவதும் உள்ள பெல்டா குடியேற்றத் திட்டங்களில் தனது கட்சியின் கிளைகளைத் திறந்தது. ஆயினும், அதன் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த மறைந்த முன்னாள் பிரதமர் துன் ஹுசேய்ன் ஓன் அக்கட்சியை கூட்டணியிலிருந்து வெளியேற்றினார்.

அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையே உடன்படிக்கை கையெழுத்திடும் நிகழ்ச்சியில், அம்னோவின் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்தது நெருடலை ஏற்படுத்தி இருப்பதாகக் காடிர் ஜாசின் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker