Latestமலேசியா

இந்திய முடிவெட்டும் நிலையங்களுக்கு மூடுவிழாவா?

கோலாலம்பூர், செப். 15 – முடிவெட்டும் நிலையங்களில் வெளிநாட்டுக் காரர்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என அரசு அறிவித்ததை அடுத்து, இந்திய முடிவெட்டும் நிலையங்கள் மூடுவிழா காணும் என அச்சம் மேலோங்கியுள்ளது.

இது சம்பந்தமான ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கும் இந்திய முடிவெட்டுவோர் சங்கத்தின் துணைத் தலைவர் எம். கனதீபன், இந்திய முடிதிருத்தும் நிலையங்கள் நாட்டில் 100 ஆண்டுகளுக்கு மேல், மூன்று தலைமுறைகளாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

நாட்டில் இந்திய முடிதிருத்தகங்கள் 718 இருப்பதாகவும் அதில் 171 நிலையங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கில் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், கட்டணமாக 10 லிருந்து 14 ரிங்கிட் வரை வசூலிக்கப்படும்போது, சலூன்களில் 35 ரிங்கிட் விதிக்கப் படுவதாகத் தெரிவித்தார்.

சலவைத் தொழில், ஜவுளி, முடி திருத்தகம், நகை உற்பத்திக் கடைகளில் வெளிநாட்டுக்காரர்களை படிப்படியாகக் குறைத்து, 2021ஆம் ஆண்டு வாக்கில் முற்றாகத் தடை விதிக்கும் அரசின் அறிவிப்பினால், இந்தியர்களின் முடி திருத்தகங்கள் முற்றாக துடைத் தொழிக்கப்படும் என அவர் அச்சம் தெரிவித்தார்.

எனவே, சட்ட விரோத அந்நியர்களை வேலைக்கமர்த்தும் நிலையங்களின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதே வேளையில் சட்டப்பூர்வ நிலையங்களில் அந்நியர்களை வேலைக்கு அமர்த்த அரசு அனுமதியளிக்க வேண்டுமென கனதீபன் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker