Latestமலேசியா

எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி – நேசா வெகுமதி

கோலாலம்பூர்     செப் 15 – எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற உறுப்பினர்களின் பிள்ளைகளான 20 மாணவர்களுக்கு  நேசா பலநோக்கு  கூட்டுறவுக் கழகம்  வெகுமதி தொகையை வழங்கி சிறப்பித்தது. கூட்டுறவு கழகத்தின் உறுப்பினர்களின் பிள்ளைகள் சிறந்த தேர்ச்சி பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த வெகுமதி நிகழ்வு கடந்த 2001ஆம் ஆண்டு முதல்  நடத்தப்பட்டு வருகிறது
கடந்த ஆண்டு எஸ்.பி.எம்.தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்று தற்போது மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் கவியரசி மனோகரன் மற்றும் மலேசிய புத்ரா பல்கலைகழகத்தில்  பயின்றுவரும்
யஷிகா பாலு ஆகியோர் சிறந்த மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் 1300 வெள்ளி ரொக்க வெகுமதியும் கேடயமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இதர 18 மாணவர்களுக்கு சான்றிதழுடன் ரொக்க தொகையும் வழங்கப்பட்டது.
கோலாலம்பூரில் தங்கும்விடுதி ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் நிர்வாக தலைவர் டத்தோ நோர்டின் சாலே மற்றும் அந்த ஆணையத்தின் இயக்குனர் அம்ரான் அப்துல் காதீர், நேசா பலநோக்கு கூட்டுறவு கழகத்தின் தலைவர் டத்தோ பி சசிகுமார் மற்றும் நேசா உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker