Latestமலேசியா

தங்காக், மூவாரில்: 220 பள்ளிகளும், உயர் கல்வி நிலையங்களும் மூடல்

தங்காக், செப். 15 – காற்றின் தூய்மைக் கேட்டுக் குறியீடு அபாய கட்டத்தை எட்டியுள்ளதால், இன்று, ஞாயிற்றுக்கிழமை தங்காக் மற்றும் மூவாரில் உள்ள 220 பள்ளிகளும் உயர்கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.

தங்காவில் நேற்று மாலை 5 மணியளவில் தூய்மைக் கேட்டுக் குறியீடு 208ஐ எட்டியுள்ளதால் தங்காவில் 129 பள்ளிகளும் மூவாரில் 89 பள்ளிகளும் மூடப்படுவதாக ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அமினோல்ஹுடா ஹசான் தெரிவித்தார்.

அதில் 40,000 மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் இதர பணியாளர்கள் வழக்கம்போல் பள்ளிக்குச் செல்வர்.

மாநிலத்தில் காற்றின் தூய்மைக் கேடு அணுக்கமாகக் கண்காணிக்கப் படுவதாகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker