Latestமலேசியா

தேசிய ரோபோட்டிக் போட்டி – மேரூ தமிழ்ப்பள்ளியின் கீர்த்திகன் வெற்றி

கோலாலம்பூர் செப் 14 – தமிழ் பள்ளி மாணவர்களிடையே ரோபோட்டிக்  எனப்படும் இயந்திரயியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில்  கோலாலம்பூர் அனைத்துலக கண்காட்சி மையத்தில் நடைபெற்ற தேசிய ரோபோட்டிக் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி பொன்னுசாமி பரிசுகளை எடுத்து வழங்கினார். இப்போட்டியில் 600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய நிலையில் இரண்டாவது முறையாக தமிழ் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இந்த போட்டியில்  திரளாக மாணவர்கள் கலந்துகொண்டது  குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் வேதமூர்த்தி தெரிவித்தார். சிந்தனைக்கு வேலை கொடுக்கக்கூடிய இத்தகைய போட்டிகளில் பிள்ளைகள் கலந்து கொள்வதற்கு பெற்றோர்கள் தொடர்ந்து ஊக்குவிப்பும் ஒத்துழைப்பையும் வழங்கி வர வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

நான்கு சுற்றுக்கள் அடிப்படையாகக்கொண்ட இந்த போட்டியில் கிள்ளான் மேரு தமிழ் பள்ளியை சேர்ந்த மாணவர் கீர்த்திகன் ராமச்சந்திரன் முதல் பரிசை வென்ற வேளை தாமான் பெர்மாய்  தமிழ் பள்ளியைச் சேர்ந்த  அம்பாரிஸ் வேலன்  மற்றும்  சுஜித்ரா மணிசேகர் இரண்டாவது பரிசை வென்றனர்.  இவர்களுக்கு பதக்கம், கிண்ணம் மற்றும் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது

பத்துமலை தமிழ் பள்ளியைச் சேர்ந்த சச்சுதன் நாயர், செனவாங்  தமிழ் பள்ளியின் நிமலன் சரவணன் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
மேலும்  பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப் பள்ளியின் முகமட் கைருல்,
ரவாங் தமிழ்ப்பள்ளியின் குகிலன் செந்தில்நாதன், ஜாலான் மேரு தமிழ் பள்ளியைச் சேர்ந்த தமிழ்மாறன் சங்கர்,  ஷா அலாம் சுங்கை ரெங்கம் தமிழ்ப் பள்ளியின்
யஷிகா குணரத்னம் காலிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக கோம்பாக் சுங்கை பூசு தேசிய பள்ளியைச் சேர்ந்த 40 பூர்வகுடி மாணவர்களுக்கு ரோபோடிக் தொடர்பான செயல்முறை பயிற்சியும் நடத்தப்பட்டது. தொழில்நுட்பம், இயக்கவியல் தொழிற்புரட்சி மற்றும் இதர நவீன அறிவியல் மேம்பாடுகளை பூர்வகுடி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கான இந்த ரோபோடிக் பயிற்சி அமைந்தது.


நான்காம் தொழிற்துறை புரட்சிக்கு தயார் செய்யும் வகையில் இளம் வயதிலேயே அதற்கான அடித்தளத்தை அமைக்கும் வகையில் ஏற்பாடு செய்யும் வகையில் அமைந்திருந்தது இந்த போட்டி.  இது போன்ற முன்னெடுப்புகள இன்னும் பரவலாக நடத்தப்படுவது நமது தமிழ்ப்பள்ளி மாண்வர்களுக்கு உந்துதலாக அமையும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker