Latestமலேசியா

பேரரசியாரை நிந்தித்த காலிட் இஸ்மத்- பிணையில் விடுதலை

கோலாலம்பூர், செப். 15 – மலேசிய சோஷலிச கட்சியின் இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் காலிட் இஸ்மெத்திடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், அவர் விடுவிக்கப்பட்டார்.

பேரரசியார் துங்கு அஸிசா அமீனா மைமுனா இஸ்கண்டாரியாவை நிந்தனையாக டுவிட்டரில் எழுதியதாக அவர் கைது செய்யப்பட்டார்.

வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், நேற்று, சனிக்கிழமை பிற்பகல் 12.15 மணியளவில் டாங் வாங்கி போலீஸ் நிலையத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

அது சம்பந்தமாக பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ்.அருள்செல்வன், காலிட்(29) வெள்ளிக்கிழமை கிள்ளானில் உள்ள இல்லத்தில் இரவு 10.30க்கு கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

தமது 4 வயது மகள் அப்போது தம்முடன் இருந்ததால், தமக்கு கை விலங்கு இட வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.

தேசிய தினத்தின்போது பேரரசியார் இருக்கையில் அமர்ந்து அணிவகுப்பைப் பார்வையிடாமல் கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தது சிறு பிள்ளைத் தனமானது என காலிட் இஸ்மெத் சமூக ஊடகத்தில் எழுதியிருந்தது நிந்தனை என போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அவர் கைது செய்யப்பட்டதை அறிந்து தாம் மன வருத்தம் அடைவதாகப் பேரரசியார் தமது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker