Latestமலேசியா

மைகார்டுகளை விற்கும் கும்பல்- தேசத் துரோகிகள் – முகைதீன் யாசின்

கோலாலம்பூர், செப்.15 – மைகார்டு, பிறப்புப் பத்திரங்களை வெளி நாட்டுக்காரர்களுக்குப் பணத்திற்காக விற்றது மாபெரும் தேசத் துரோகம், அதற்கு மன்னிப்பே கிடையாது என உள்துறை அமைச்சர் முகைதீன் யாசின் தெரிவித்தார்.

அம்மாதிரியான கீழறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களிடம் விட்டுக் கொடுக்கும் போக்கு காட்டப்படாது என அவர் குறிப்பிட்டார்.

அடையாளக் கார்டுகளையும் பிறப்புப் பத்திரங்களையும் விற்ற சந்தேகத்தின் பேரில் தேசிய பதிவிலாகா அதிகாரிகள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டதன் தொடர்பில் கருத்துரைக்கும்போது முகைதீன் அவ்வாறு குறிப்பிட்டார்.

ஆகஸ்டு 19இல் இது சம்பந்தமாக பினாங்கில் மேற்கண்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை தேசிய பதிவிலாகாவின் துணை ஆணையர், டத்தோ விருது பெற்ற வர்த்தகர் ஒருவர் மீதும் 32 அடையாளக் கார்டுகளை வெளிநாட்டுக்காரர்களுக்கு
விற்ற 32 வழக்குகள் சுமத்தப்பட்டன.

இந்த விவகாரம் 2007ஆம் ஆண்டு ஆள்கடத்தல் சட்டத்தில் விசாரணை செய்யப்படும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டுக்கு மேற்போகாத சிறையும் 50,000 ரிங்கிட்டுக்குக் குறையாத அபராதமும் விதிக்கப்படும்.

போலீஸ், ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு தேசிய பதிவிலாகா முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென தாம் பணித்திருப்பதாகவும் முகைதீன் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker