Latestமலேசியா

மின்சாரம் பாய்ந்து இருவர் மரணம்

கோல கிராய், செப். 16 – கிளந்தான், கோல கிராய் கோம்பளக்ஸ் பெர்காயுவான் கிளந்தான் ஸ்டோங் எனும் இடத்தில் மின்சாரம் தாக்கி இருவர் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அந்தச் சம்பவத்தில் 27, 50 வயதுடைய இருவர் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மின்சாரம் பாய்ந்து மரணம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கோல கிராய் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் வான் பவுசி வான் இஷாக் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker