Latestமலேசியா

வேற்றுமையிலும் ஒற்றுமையைக் காப்போம்: மகாதீர், அன்வார் மலேசிய தின வாழ்த்து

கோலாலம்பூர், செப். 16 – வேற்றுமையிலும் ஒற்றுமையைக் காப்போம் என பிரதமர் துன் மகாதீரும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமும் தனித் தனியாக மலேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரிவினையை விதைக்கும் தடைகளை உடைத்தெறிவோம் என மகாதீர் தமது அதிகாரப்பூர்வ முகநூலில் குறிப்பிட்டார்.

நாம் அனைவரும் மலேசியர்கள். இனம், சமயம் மற்றும் நம்பிக்கைகளைத் தகற்தெறிந்து ஒற்றுமையைக் காக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இதனிடையே அன்வார் முகநூலில் வெளியிட்ட தமது வாழ்த்துச் செய்தியில்,மலேசிய தினம் என்பது வேற்றுமையிலும் நமது வலுவைப் பலப்படுத்துவோம் என அறைகூவல் விடுத்தார்.

இனவாதம் மற்றும் சந்தேக சூழ்நிலையில் நாம் இருந்தாலும், பிரிவினையிலும் அமைதி, சுபிட்சம் போன்றவற்றை அடைந்ததில் அதனை கோலாகலமாகக் கொண்டாடுவோம் என அன்வார்
குறிப்பிட்டார்.

சிறந்த மலேசியா என்பது யாரையும் புறக்கணிப்பது அல்லவெனகுறிப்பிட்ட அவர், தமது மலேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker