Latestஉலகம்

அமெரிக்க  மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் பதப்படுத்தப்பட்ட கரு குவியல்!

சிகாகோ,செப்.17- அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரை சேர்ந்தவர் உல்ரிச் கிளோபர். மருத்துவரான இவர் கருக்கலைப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார்.இவரது வீட்டில் 2 ஆயிரம் பதப்படுத்தப்பட்ட கரு குவியல் கண்டெடுக்கப்பட்ட து.

கடந்த 2016-ம் ஆண்டு இவர் 13 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததை அதிகாரிகளிடம் தெரிவிக்க தவறியதால், அவரது மருத்துவமனைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு, மருத்துவமனை மூடப்பட்டது.

இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3-ஆம்தேதி உல்ரிச் கிளோபர் உயிர் இழந்தார். அதனை தொடர்ந்து, டாக்டரின் குடும்பத்தார் அவரது சொத்துகளை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவருக்கு சொந்தமான ஒரு வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம், அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker