Latestஇந்தியா

உலக டிரண்டிங்கில் மோடியின் பிறந்தநாள்!

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறும் செய்திகள் டுவிட்டரின் உலக டிரண்டிங்கில் 7 இடங்களை பிடித்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்த நாளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கட்சி தொண்டர்களும் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் மோடிக்கு சமூக வலைதளங்கள் வழியாகவும் பலர் வாழ்த்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் இருந்தும் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிகின்றன. அதாவது டுவிட்டரில் உலக டிரண்டிங்கில் முதல் 10 இடங்களில் மோடி குறித்த சொற்கள் மட்டும் 7 இடங்களில் உள்ளன.

இது போக தனது 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மோடி பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனூடே இன்று காலை குஜராத்திலுள்ள சர்தாய் வல்லபாய் பட்டேலின் ”ஒற்றுமையின் சிலை”யை பார்வையிட்டார். பின்பு நர்மதா நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்றார். பின்பு அங்கு அந்த அணையின் நீர் வரத்து 136.68 மீட்டர் எட்டிவிட்டதை கொண்டாடும் வகையில் “நமாமி நர்மதா” விழாவிலும் கலந்து கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker