Latestமலேசியா

கடனுக்காக நண்பர் கொலை- ஆடவர் தப்பி ஓட்டம்

ஜோர்ஜ் டவுன், செப். 17 – கடன் பிரச்சினையில் எழுந்த கருத்து வேறுபாட்டினால் நண்பரால் நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் செப்டம்பர் 15ஆம் தேதி புக்கிட் ஜம்புல் காம்பக்ஸின் மணிக் கூண்டுக்கு அருகில் நடந்தது.

அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ 33, 35 வயதான இருவரைப் போலீசார் தேடி வருவதாக தீமோர் பாவுட் ஏசிபி சே ஸைமானி அவாங் தெரிவித்தார்.

இரவு 11.20 மணிக்கு நடந்த சம்பவத்தில் முகமட் நுசுஹுடின் இஸ்மாயில் (31) சம்பவ இடத்தில் மரணமடைந்ததாகத் தெரிகிறது.

மரணமடைந்த நபர், கொடுத்த கடனை வசூலிக்க நண்பரைச் சந்தித்த வேளையில், அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் முகமட் நுசுஹுடின் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டார்.

குத்தப்பட்ட நபர் கீழே விழுந்ததைப் பார்த்த பின்னர் குற்றவாளியும் அவரது நண்பரும் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடினர்.

அந்தச் சம்பவம் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி பதிவை வைத்து அந்த நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கொலையில் பயன்படுத்தப்பட்ட கத்தி ஒன்று போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker