Latestமலேசியா

கொள்ளைச் சம்பவத்தில் மூதாட்டி சுடப்பட்ட சம்பவம் – இருவர் கைது

ஜோகூர் பாரு, செப். 17 – நான்கு நாள்களுக்கு முன்னர், கொள்ளை முயற்சியில் மூதாட்டியை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவர் கங்கார் தெப்ராவின் கைது செய்யப்பட்டனர்.

நேற்று காலை 4.45 மணி அளவில் பாசிர் கூடாங் நெடுஞ்சாலையில் கார் ஒன்றை துரத்திச் சென்று, துப்பாக்கி வேட்டுகளை விடுத்து 36 மற்றும் 21 வயது மதிக்கத்தக்க ஓர் ஆணும், பெண்ணும் கைது செய்யபட்டதோடு அவர்களிடமிருந்து கைத் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

அவர்களின் பொரோடுவா மைவி விபத்துக்குள்ளானதில் ஆணுக்கு காலில் துப்பாக்கிச் சூடு ஏற்பட்ட வேளையில் பெண்ணுக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. காரில் இருந்த இன்னொரு நபர் தப்பித்து ஓடியுள்ளார்.

இதற்கு முன்னர், திருடப்பட்ட காரில் மூவர் பயணம் செய்ததைக் கண்டு போலீசார் அதனை துரத்திச் சென்றுள்ளனர்.

அந்தக் காரை நிறுத்த போலீசார் எச்சரிக்கை வேட்டுகளைக் கிளப்பியும் அந்தக் கார் நிற்காமல் சாலையின் எதிர்திசையில் சென்றது.

அதன் டயர்களை நோக்கிச் சுட்டதில், அது நிலை தடுமாறி சாலையின் தடுப்புச் சுவரின் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்ட வேளையில் மற்றொரு நபர் அருகில் இருந்த புதருக்குள் ஓடி, தப்பித்துச் சென்றார்.

காயமடைந்த ஆண் தாமான் டேசா ஹார்மோனியைச் சேர்ந்தவரென்றும் பெண்ணின் பின்புலம் ஆராயப் படுகிறது. தப்பி ஓடிய நபரைத் தேடும் பணி தொடக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பி.இந்திராணி(78) என்பவர் கங்கார் தெப்ராவில், கொள்ளை முயற்சியில் துப்பாக்கிக் குண்டு பட்டு கொல்லப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. சுல்தானா அமீனா மருத்துவமனையில் சிகிச்சையின் போது அவர் மரணமடைந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker