Latestமலேசியா

தெங்கு அட்னானுக்கு லஞ்சம் – வர்த்தகருக்கு 15 லட்சம் அபராதம்

கோலாலம்பூர், செப். 17- கூட்டரசுப் பிரதேச முன்னாள் அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோருக்கு 10 லட்சம் ரிங்கிட் லஞ்சம் வழங்கிய வர்த்தகருக்கு 15 லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 70 வயது வர்த்தகரான டான் எங் பூன் அந்த அபராதத் தொகையை நாளைக்குள் செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி உத்தரவிட்டார்.

ஈராண்டு சிறை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் பிரிவு 165இன் கீழ் கொண்டு வரப்பட்ட குற்றத்தை டான் ஒப்புக் கொண்டார்.

கடந்தாண்டு நவம்பர் 15இல், பெக்கான் நெனாஸ் நிறுவனத்தின் பப்லிக் வங்கியின் காசோலையின் மூலம் தெங்கு அட்னானின் சிஐஎம்பியின் வங்கிக் கணக்கில் அந்தப் பணம் செலுத்தப்பட்டது.

ஜாலான் செமாராக்கில் உள்ள நிலத்தை டானுக்கு வழங்க, கையூட்டாக அந்த 10 லட்சம் ரிங்கிட் செலுத்தப்பட்டது.

வழக்கின் முடிவில் அபராதம் மட்டுமே விதிக்கப்படுமானால் தாம் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக டான் குறிப்பிட்டதை அடுத்து, அவருக்கு 15 லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker