Latestமலேசியா

நான்கு வயது சிறுவனை ஐந்து வயது சகோதரன் சுட்டு கொன்றான்

டெக்ஸஸ் , செப்17-  ஐந்து வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் தனது நான்கு வயது தம்பியைச் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நிகழ்ந்தபோது அவர்களின் தாயார் வேறொரு அறையில் உறங்கி கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் நேற்று அமெரிக்கா, டெக்ஸஸ் மாகாணத்தில் நிகழ்ந்தது.

த்ருத் அல்பிராய்ட் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.  மற்ற குடும்ப உறுப்பினர்கள் தூங்கி கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது என்றும் இதில் வேறுயாரும் காயம் அடையவில்லை என்றும் போலீஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார். இதனால் வரை, எந்தவொரு கைது நடவடிக்கையும் போலீசார் மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருவதாக போலீஸ் தரப்பினர் கூறினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker