Latestமலேசியா

பினாங்கின் செயற்கை தீவுகளால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு

பினாங்கு      செப்.   17 – பினாங்கு மாநிலத்தில்   உருவாக்கப்படும் செயற்கை தீவு திட்டத்தினால் அங்கு மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு  ஏற்படக்கூடும் என ஆய்வரங்கு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய திட்டங்களால் அங்கு ஏற்பட்ட மோசமான பாதிப்பை நாம் மறந்துவிட முடியாது என அந்த ஆய்வில் கலந்துகொண்ட சில சுற்றுச்சூழல் நிபுணர்களும் கல்வியாளர்களும் சுட்டிக்காட்டினர்.

பினாங்கின் தென்பகுதியில் உருவாக்கப்படும் மூன்று செயற்கை  தீவுத் திட்டங்களால் ஏற்படும்  சுற்றுச்சூழல் பாதிப்பினால்  கடல் வாழ் உயிரினங்கள்  பாதிப்புக்குள்ளாகும் போது  அதை நம்பி குறிப்பாக மீன் வளத்தை நம்பியிருக்கும் மீனவர்களின் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.


இந்தத் திட்டத்திற்காக கடலில் இருந்து மணல் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் கடல் நீரும் பரவலாக தூய்மைக்கேடு பிரச்சினைக்கு உள்ளாகும் என்று என கூறப்படுகிறது. கடல் தூய்மைக்கேட்டினால்
கடல்  பகுதிக்கு வரக்கூடிய  சூரிய ஒளி குறையக்கூடும் என்பதால்  இயல்பாகவே கடலில் உற்பத்தியாகும் மீன்களுக்கான உணவு வளங்களும்  குறையும் என தெரிவிக்கப்பட்டது.

49 பில்லியன்  வெள்ளி செலவில் மூன்று செயற்கை தீவுகளை உருவாக்கும் பினாங்கு அரசாங்கத்தின் இந்தத் திட்டம் நீண்டகால அடிப்படையில் பினாங்கில்   மட்டுமின்றி பேராவில் உள்ள மீனவ சமூகத்திற்கும் பெரும்
பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

இதற்கு முன் கடற்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பினால் குறைந்து வரும் கடல் வாழ் உயிரினங்கள் இனி முழுமையாக அழியக் கூடிய சாத்தியம் இருப்பதால் மீனவர்கள் பெரிய அளவில் வருமான பாதிப்புக்கும் உள்ளாக வேண்டியிருக்கும் என இந்த ஆய்வரங்கில் உரையாற்றிய திருமதி  எவ்லின் தே கூறினார்.  

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் இடைக்காலத்   தலைவர் மொகிதீன்  அப்துல் காதீர், புத்ரா மலேசியப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுத் துறையை சேர்ந்த டாக்டர் முகமட் இஷாக்,  பினாங்கு மீனவர் சங்கத் தலைவர் நஸ்ரி அகமட், செபெராங் பிறை வட்டார மீனவர் சங்க தலைவர் மஹாடி முகமட் ரோட்ஷீ உட்பட பல்வேறு துறைகளின் நிபுணர்களும் தங்களது ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தனர்.
Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker