Latestமலேசியா

1எம்டிபி  நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்

கோலாலம்பூர் செப் 17-1எம்டிபி உருவாகுவதற்கு முக்கிய பொறுப்பாளராக டத்தோஸ்ரீ நஜீப்  ரசாக் இருந்ததோடு அவரது சிந்தனையில் உதித்த செல்ல குழந்தையாக அந்த நிறுவனம் இருந்ததாக நஜிப்பின் முன்னாள் சிறப்பு  உதவியாளர் டத்தோ அம்ஹாரி எப்ஃபென்டி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 1எம்டிபி லஞ்ச ஊழல் வழக்கில் சாட்சியம் அளித்தபோது அம்ஹாரி இதனைத் தெரிவித்தார்.

மாநில முதலீடு நிறுவனமான அதனை மேம்படுத்தும்  திட்டத்தை  2009ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்பதற்கு முன்னதாகவே நஜீப் கொண்டிருந்தார் என அம்ஹாரி சொன்னார்.

எதிர் தரப்பு வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி  அப்துல்லாவின் குறுக்கு கேள்விகளுக்கு  பதில் அளித்தபோது அவர் இதனை தெரிவித்தார். பின்னர் 1எம்டிபியாக மாறிய திரெங்கானு முதலீட்டு வாரியம்  அந்த அமைப்பின் சிந்தனையில் உருவானதா  என  ஷாபி கேள்வி எழுப்பினார். திரெங்கானு முதலீட்டு வாரியம் குறித்து தமக்குத் தெரியாது என்றும் ஆனால் 1எம்டிபி  நஜீப்பின்  சிந்தனையில் உருவான திட்டம் என  அம்ஹாரி   மறுமொழி தெரிவித்தார்.

இதனிடையே  2008ஆம் ஆண்டு ஆலோசனை முன்மொழியப்பட்டது முதல் திரெங்கானு முதலீட்டு வாரியத்தை அமைக்கும் திட்டத்தில் வர்த்தகர் ஜோ லோ அதிக ஆர்வம் கொண்டிருந்தார் என்றும் அவர் சொன்னார். அந்த நிறுவனம் அமைப்பதற்கான தொடக்க கட்ட நிலையில்   அதன் ஆலோசனைக்கான நகலையும் ஜோ லோ  சமர்பித்ததாகவும் அம்ஹாரி  எப்ஃபென்டி தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.

T. I A   எனப்படும்  திரெங்கானு முதலீட்டு வாரியம் அப்போது பேரரசராக இருந்த மேன்மை தங்கிய திரெங்கானு சுல்தான்  மிஸான் ஜைனால் அவர்களது சிந்தனையில் உதித்தது என்பது தெரியுமா என வழக்கறிஞர்  முகமட் ஷாபி அப்துல்லா வினவிய போது இது தமக்குத் தெரியாது என அம்ஹாரி மறுமொழி தெரிவித்தார்.

அதோடு 1எம்டிபி நஜிப்பின் சிந்தனையில் உருவான குழந்தை அல்ல .2008 ஆம் ஆண்டிலேயே அது நாடு முழுவதும் தெரிந்துவிட்டது என  முகமட் ஷாபி நீதிமன்றத்தில் தெரிவித்தார்..எனினும் ஷாபியின் இந்த கருத்தை  தாம் ஏற்க முடியாது  என அம்ஹாரி கூறினார்.. வழக்கு விசாரணை தொடரும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker