Latestமலேசியா

அடுத்த ஆண்டு பிரதமர் பதவியை ஏற்பேன் – டத்தோஸ்ரீ அனவார்

கோலாலம்பூர், செப் 18 – அடுத்த ஆண்டு 2020இல் டாக்டர் மகாதீரிடமிருந்து  பிரதமர் பதவியை ஏற்கக்கூடும்  என தாம் எதிர்பார்ப்பதாக பிகேஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

தமக்கு  போட்டியாக இருப்பவர்கள் சட்டப்பூர்வ தன்மையை கொண்டிருக்கவில்லை என  புளும்பெர்க் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்தார்

பிரதமர் பதவிக்கு மற்றவர்களின் பெயர்களை முன்மொழியவோ, அவர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்கோ எந்த ஒரு கட்சியும் ஈடுபட்டு வருவதற்கான அறிகுறி தென் படவில்லை என்றும் அன்வார் கூறினார்.

இந்த நோக்கத்தை கொண்டிருக்கும் மற்ற தனிப்பட்ட நபர்களை இது தடுக்காது. எனினும் அவர்கள் எவரும்  இதற்கு பொருத்தமாக  இல்லையென அவர் சொன்னார்.

2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நம்பிக்கை கூட்டணி தலைவர்களிடையே இணக்கம் காணப்பட்டதற்கு ஏற்ப அன்வாரிடம்  பிரதமர் பதவியை ஒப்படைப்பதற்கான தேதியை குறிப்பிடும்படி அண்மைய காலமாக டாக்டர் மகாதீர் நெருக்கதலுக்கு உள்ளாகி வருகிறார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டாக்டர் மகாதீர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாம் பதவி  விலகி அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க விருப்பதாக அவர் தொடர்ந்து கூறிவருகிறார்.

இதனிடையே மலாய்க்காரர்களின் அச்சத்தை  போக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அனைத்து இனங்களையும் சேர்ந்த ஏழைகளுக்கு அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கை  விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும்  அன்வார் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker