Latestஇந்தியா

இந்திய கைதிகளின் நூதன திருட்டு

புதுடில்லி, செப். 18 – திருடுகளும் கொள்ளைகளும் மலிந்து கிடக்கும் நிலையில், இந்தியாவின் உத்தர பிரதேச சிறையில் இருக்கும் கைதிகள் நூதன முறையில் பொருள்களையும் போதைப் பொருள்களையும் கடத்தி சிறைக்குக் கடத்திச் செல்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அண்மையில் உத்தர பிரதேச பாக்பட் மாவட்ட சிறையில் இருக்கும் இரு கைதிகள் வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்துக்குச் சென்ற பின்னர், சிறைக்கு மீண்ட போது, வயிற்று வலியால் துடித்துள்ளனர்.

மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவர்களைச் சோதனை இட்டதில் ஒருவர் தனது ஆசன வாயின் வழியாக போதைப் பொருள் பொட்டலங்களையும் மற்றொருவர் கைப்பேசியையும் அதே வகையில் செலுத்தி, வயிற்றுக்குள் மறைத்து வைத்து சிறைக்கு எடுத்துச் சென்றது அம்பலமானது.

கைப்பேசியை வெளியே எடுக்க முடியாததால், அந்த நாபருக்கும் அறுவைச் சிகிச்சையின் மூலமே அது அகற்றப்பட்டது.

திங்கட்கிழமை சில சிறைக் கைதிகள் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, உறவினர்கள் தந்த கைப்பேசியை வயிற்றில் மறைத்து வைத்து சிறைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் வலி தாங்க முடியாமல் துடித்தபோது, வயிற்றில் கைப்பேசி மறைத்து வைத்து எடுத்துச் சென்றதை ஒப்புக் கொண்டனர். அறுவைச் சிகிச்சையின் மூலமே அந்தக் கைப்பேசியும் அகற்றப்பட்டுள்ளது.

பெரும்பாலும் சிறையில் இருக்கும் மற்ற கைதிகளிடம் கொண்டு சேர்க்கவே, போதைப் பொருளும் கைப்பேசிகளும் அம்மாதிரியான முறையில் கடத்தப்படுவதாகவும் அதில் பணப் பரிமாற்றமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதே போன்று, இவ்வாண்டு மே மாதம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் இரு பயணிகளைச் சோதனை இட்டதில், அவர்கள் இருவரும் ஒரு கோடி ரூபாய் பெறுமான 3 கிலோ தங்கத்தை வயிற்றில் மறைத்து வைத்துக் கடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker