Latestமலேசியா

இந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு

ஜகார்த்தா, செப். 18 – இந்தோனேசிய பெ பெண்களிண் ஆகக் குறைந்த திருமண வயது 16லிருந்து 19 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது.

அதனை அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரிதுள்ளதைப் பல தரப்பாரும் வரவேற்றுள்ளனர்.

அங்கு பெண்கள் 18 வயது ஆகும் முன்னரே திருமணம் செய்வது கொள்வதாகவும் பெற்றோரின் சம்மதத்தோடு எந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம் என விதி உள்ளது.

மேலும் உலகில் சிறார் திருமணங்கள் நடக்கும் 10 நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று என சொல்லப்படுகிறது.

சிறார் திருமணங்களினால் அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதம் பெருமளவில் அதிகரித்து வருவதாகப் பல தரப்பாரும் சாடி வந்துள்ளனர்.

45 ஆண்டுகளுக்குப் பின்னர் திருமணச் சட்டம் திருத்தப்பட்டதால் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராட்டப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker