Latestமலேசியா

உணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்

பெட்டாலிங் ஜெயா, செப். 18 – வீட்டிலிருந்தே உணவுக்கு ஆர்டர் கொடுக்கும் நடைமுறை நாட்டில் பிரபலமாகி வரும் வேளையில், நபர் ஒருவர் தாம் ஆர்டர் செய்த உணவை அதைக் கொண்டுவந்த நபருக்கே உண்ணக் கொடுத்த செய்கை வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விஷயத்தை டுவிட்டர் பயணர் ஒருவர் டனியால்ரஃபிக் எனும் முகவரியிட்ட டுவிட்டரில் பதிவேற்றியிருக்கிறார்.

அவர் இணைத்துள்ள ரசீதில் அதனை ஆர்டர் செய்தவர், சகோதரரே, நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா? நீங்கள் உணவைப் பெற்ற பின்னர், சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு, அந்த உணவை நீங்களே சாப்பிட வேண்டுமென கேட்டுக் கொண்ட குறிப்பு அதில் எழுதப்பட்டிருந்தது. அவர் ஈப்போவில் இருந்து அந்த ரசீதை டுவிட்டரில் இணைத்துள்ளார்.

அந்த ரசீதில் எழுதப்பட்ட வாசகத்தோடு டனியால்ரஃபிக் எனும் டுவிட்டரைக் கொண்ட நபர் ஈப்போவில் இருந்து இணைத்துள்ளார்.

அந்த டுவிட்டர் 21,000 முறை பரிமாறப்பட்டதோடு 19,000 பேரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker