Latestமலேசியா

காரம் மிகுந்த உணவு – உடலுக்குக் கேடு

கோலாலம்பூர், செப். 18 – காரமான உணவைத் தொடர்ந்து எடுத்துக் கொண்ட மாது ஒருவர் நோய்வாய்ப்பட்டு தப்பிப் பிழைத்துள்ளார்.

காலை 2 லிருந்து 4 மணி வரை தமக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டதாகவும், கடுமையான நெஞ்சு எரிச்சலுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் பலனளில்லை என அவர் தெரிவித்தார்.

உயிர் போகும் உணர்வு ஏற்பட்டதாகவும், கைகால்கள் சோர்ந்து போயின. தாம் இறந்து போகும் எண்ணம் வந்து அச்சத்தை உருவாக்கியதாக அவர் தெரிவித்தார்

பல்வேறு சோதனைகளை மேற்கொண்ட மருத்துவர் அதிக கார உணவை அடிக்கடி உண்ணும் காரணத்தினால், நெஞ்சுக்கும் வயிற்றுக்கு இடையே இருக்கும் டையபிரம் எனும் உறுப்பு பலவீனமாகி, காற்று அழுத்தத்தினால் நெஞ்சு கரிப்பும் வலியும் எற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அது மேலும் அதிகரித்து நெஞ்சு வலி, உணவை உட்கொள்ள முடியாமை, சுவாசிக்க முடியாத உபாதைகளை அளித்திருப்பதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதிரியான நோய் மலேசியர்களுக்கு அதிகரித்து வருவதாகவும் அளவுக்கதிக உணவை உட்கொள்ளுதல் , சரியான நேரத்தில் உண்ணாமை, சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் செல்லுதல், காரமான உணவை உட்கொள்ளுதல், தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பதாலும் வருவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் உணவை மிதமாக உட்கொள்ள வேண்டுமென்றும் அதிக காரமான உணவைத் தவிர்க்க வேண்டுமெனவும் அந்த மாது கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker