Latestமலேசியா

சாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்

கிரிக், செப். 18 – திங்கட்கிழமை ஜாலான் ராயா கிரிக்-ஜெலி சாலையின் 24ஆவது கிலோ மீட்டரில் இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஜித்ரா தொழில் பயிற்சி கல்லூரி மாணவர் ஒருவர் மரணமடைந்த வேளையில் 7 பேர் காயமடைந்தனர்.

மாலை 5.40மணிக்கு நடந்த அந்த விபத்தில் முகமட் ஹாசிக் அஃனான் ஃபாசில்(20) தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

நண்பர் ஓட்டி வந்த பெரோடுவா விவா காரும் ஜெலியிலிருந்து கிரிக்குக்குச் 5 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேரோடுவா அருஸ் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், அந்த விபத்து நேர்ந்துள்ளது.

மாணவர் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசைக்குச் சென்று எம்பிவி வாகனத்தை மோதியதாகச் சொல்லப்படுகிறது.

அந்த விபத்தில் பயணியாக இருந்த முகமட் ஹாசிக் வாகனத்தில் சிக்கிக் கொண்டதாகவும் அவரைப் பரிசோதித்த மருத்துவ அதிகாரி, அவரின் மரணத்தை உறுதிப் படுத்தினார்.

22 வயதான பெரோடுவா விவாவின் ஓட்டுநர் கிரிக் மருத்துவமனையில் அணுக்கக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker