Latestசினிமாமலேசியா

ஜொகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி!


ஜொகூர் பாரூ, செப் 18 – ஜோகூர் நேயர்களை உங்களை மகிழ்ச்சிப்படுத்த, மின்னலின் சிறப்பு தீபாவளி இசை நிகழ்ச்சி, செப்டம்பர் 21ம் தேதி, சனிக்கிழமை, JOHOR AUDITORIUM RTMயில், மாலை மணி 6 தொடக்கம் நடைபெறவுள்ளது. உங்களின் தீபாவளி கொண்டாட்டத்தை மின்னலோடு தொடங்குங்கள். ஜோகூர் கலைஞர்களின் படைப்புகளைக் கண்டும் கேட்டும் நீங்கள் மகிழலாம். நுழைவு இலவசம்.
ஜோகூர் இந்திய இசைக்குழு, ஜொகூர் நேயர்களிடம் மிகவும் பிரபலமான கலைஞர் செல்வம் மேற்பார்வையில், இசைக் கருவிகள் நேரடியாக வாசிக்கப்பட்டு (live band)ல் பாடகர்கள் பாடல்களை பாடவிருக்கின்றார்கள்.
ஜோகூர் கலைஞர்களான “அன்பே எனது அன்பே” பாடல் புகழ் லூர்துநாதன், “மங்கல ஒளி வீசும் தீபாவளி” பாடல் புகழ் சுகன்யா, மின்னலின் பாடல் திறன் போட்டியின் வெற்றியாளரான கார்த்திக், “OH ZORIA” பாடல் புகழ் Celebrity மதன் 80 ஆம் ஆண்டு பாடல் புகழ் சிவா, “என்னை கொல்லாதே” பாடல் புகழ்” கேஷ்விணி” இந்நிகழ்ச்சியில் களம் இறங்குகிறார்கள்.
நம் நாட்டின் பிரபல மண்ணின் மைந்தர்களான HAVOC BROTHERSயின் அதிரடியான அட்டகாசமான பாடல் படைப்புகளையும் நீங்கள் ரசிக்கலாம்.
நம் நாட்டின் பிரபல பாடல் கலைஞர்களான திருச்செல்வம், சர்மிளா சிவகுரு, சித்தார்தன், தாச்சாயினி இவர்களின் அமர்களமான பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம்.
AMR நகைச்சுவை குழுவினர் நண்டு ரமேஷ் & முருகேசுவின் நகைச்சுவை படைப்பு. இவர்களோடு வளரும் நகைச்சுவை கலைஞர்கள் குமரவர்மன், டினசினி (DHINASHINI), ஜெகதிஷ் ஆகியோரின்  நகைச்சுவை படைப்பை காணலாம்.
உங்களை நேரில் காண மின்னல் எப் எம் அறிவிப்பாளர்கள் நாங்கள் வருகிறோம். மின்னலின் சிறப்பு தீபாவளி இசை நிகழ்ச்சி, முழுக்க முழுக்க உங்களை மகிழ்ச்சிபடுத்தும்!
திரண்டு வாருங்கள்!
Vetha • 35 mins
Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker