Latestமலேசியா

நாட்டில் மீண்டும் காசநோய் அச்சுறுத்தல்

டீ. பி எனப்படும் காசநோய் அல்லது எலும்புருக்கி நோய் மீண்டும் மிரட்டலாக நாட்டில் உருவெடுத்து பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 1940 மற்றும் 1950ம் ஆண்டுகளில் காசநோய் மலேசியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது .

ஆனால் இந்நோய்க்கு  ஆளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முறையான சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தியதால் கிட்டத்தட்ட  காச நோயை துடைத்தொழிக்கும் நடவடிக்கை படிப்படியாக வெற்றியைத் தேடித் தந்தது .

இருமல் ,தும்மல் ,உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து  காற்றில் பரவும் தன்மையை  காசநோய் கொண்டுள்ளது .அண்மையில் பினாங்கு மாநிலத்தில் 19 வயதுடைய ஆறாம் படிவ மாணவி ஒருவர்  காச நோயினால் பாதிக்கப்பட்டு  மரணமடைந்தார். இருமலின் போது போது  ரத்தம் வந்ததை தொடர்ந்து  அந்த மாணவியை அவரது பெற்றோர் பினாங்கு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அந்த மாணவி மணரமடைந்தார்.

அந்த மாணவி பயின்று வந்த  இடைநிலை பள்ளியை சேர்ந்த 373 மாணவர்களும் ஆசிரியர்களும் காசநோய்க்கான பரிசோதனைக்கும் உள்ளாகினர்.
இவர்களில் 33 பேர் காசநோய்க்கான தொடக்கக்கட்ட கிருமியை கொண்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டது.

தொடர்ச்சியாக இருமல் மற்றும் காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் காசநோய்க்கான பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். மேலும்  இருமும்போது ரத்தம் தொடர்ந்து வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 25 ஆயிரம் முதல் 20,000 பேர் வரை காசநோயின் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்களில் ஆறு விழுக்காட்டினர் மரணம் அடைகின்றனர்.
2015 ஆம் ஆண்டில் 24,200பேரும், 2017ஆம் ஆண்டில் 24,739பேரும்  காச நோயினால்  பாதிக்கப்பட்டனர். .கடந்த ஆண்டு இந்நோயினால் 25,537பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இவர்களின் 1,554 பேர் மாண்டதாக சுகாதாரத் துறை துணை அமைச்சர்  டாக்டர் லீ பூன் சாய்  கூறியுள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிறகு இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் காச நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது வெற்றிபெற்றாலும் 1980 மற்றும் 1990 ஆம்  ஆண்டுகளில்  வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகமாக நாட்டிற்கு வந்ததால் மீண்டும் காசநோய் அதிகரிக்க தொடங்கியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker