Latestமலேசியா

பயணிகளின் விவரங்கள் கசிவு; கடவுச் சொல்லை மாற்றுங்கள் – மலின்டோ

கோலாலம்பூர் செப் 18 – மலின்டோ விமான நிறுவனத்தின் அகப் பக்கத்தை பயன்படுத்தும்
கடவுச்சொல் ஒரே மாதிரியாக இருந்தால்  இதர இணைய சேவைகளுக்கு தங்கள் கடவுச்சொல்லை மாற்றும்படி தனது பயணிகளை  மலின்டோ ஏர் வேஸ் கேட்டுக்கொண்டது.

அந்த  விமான  நிறுவனத்திற்கு சொந்தமான  லட்சக்கணக்கான பயணிகளின்  விவரங்கள்  தரவு பட்டியலிருந்து கசிந்து இருப்பதாக சவத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை தகவல் வெளியிட்டதை தொடர்ந்து மலின்டோ ஏர் இந்த  கோரிக்கைய விடுத்தது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மலேசியா கணினி பாதுகாப்பு உட்பட பல்வேறு அதிகாரிகளின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்லவிருப்பதாக மலின்டோ ஏர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.
அதோடு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மற்றும் புகார் செய்வதற்கு  சுயேச்சை கணினி குற்ற அதிகாரிகளையும்   கூடுதல் நடவடிக்கையாக மலின்டோ  ஏர் நியமித்துள்ளது.

2010ஆம் ஆண்டின்  மலேசியர்களின் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஏற்ப எங்களது பயணிகளின் தரவுகளை உறுதி செய்வதற்கு கூடுதல் நடவடிக்கைகளையும் மலின்டோ விமான நிறுவனம் எடுத்துள்ளது.

மேலும் எங்களது வாடிக்கையாளர்களின் கட்டணம் செலுத்திய விபரங்கள் எதனையும் எங்களது சேவரில் சேமித்து வைக்கவில்லை என்றும் அந்த விமான நிறுவனம் கூறியது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker