Latestமலேசியா

புகை மூட்டம் கடுமை – நாடு முழுமைக்கும் 1,484 பள்ளிகள் மூடல்

புத்ரா ஜெயா, செப். 18 – இன்று பிற்பகல் 1 மணி வரை நாடு முழுமைக்கும் 1,484 பள்ளிகள் மூடப்பட்டதாகக் கல்வி அமைச்சு அறிவித்தது.

7 மாநிலங்கல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பினாங்கில் 162 பள்ளிகள்( 90,233 மாணவர்கள்), கோலாலம்பூரில் 66 பள்ளிகளின் 48,527 மாணவர்கள், நெகிரி செம்பிலானில் 53 பள்ளிகளின் 28,073 மாணவர்களும், புத்ரா ஜெயாவில் 25 பள்ளிகளின் 27,531 மாணவர்களும் பள்ளிக்குச் செல்லவில்லை.

வரையறுக்கப்பட்ட பணி நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள், ஆசிரியர்களின் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டுமென பள்ளிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் புகைமூட்டம் கலிமந்தான், இந்தோனேசியாவின் காட்டை அழித்து எரிக்கும் நடவடிக்கைகளால் ஏற்படுவதாகும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker