Latestமலேசியா

ஸாக்கிர் நாயக்கை வெளியேற்றும்படி மோடி கேட்கவில்லை – மீண்டும் கூறும் மகாதீர்

கோலாலம்பூர் செப் 18 – சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கிர் நாயக்கை மலேசியாவிலிருந்து வெளியேற்றும்படி தம்மை சந்தித்தபோது இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொள்ளவில்லை என்பதை தாம் மீண்டும் வலியுறுத்துவதாக துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

நான் மோடியை சந்தித்தேன். அவர் ஸாக்கிர் நாயக்   தொடர்பாக  குறிப்பிட்டார். ஆனால் அவரை இந்தியாவுக்கு அனுப்பும்படி மோடி  கோரிக்கை விடுக்கவில்லை என புதிய மலேசியாவுக்கான வெளியுறவு கொள்கையின் அடிப்படை கட்டமைப்பை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது டாக்டர் மகாதீர் இதனைத் தெரிவித்தார்.

ஸாக்கிர் நாயக்கை வெளியேற்றும் படி கடந்த ஜனவரி மாதமே இந்தியா கோரிக்கை விடுத்ததாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டிருந்தது.

செப்டம்பர் 5ஆம் தேதி ரஷ்யாவில் டாக்டர் மகாதீரை சந்தித்தபோது ஸாக்கிர் நாயக்கை வெளியேற்றும் படி பிரதமர் மோடி  கேட்டுக்கொண்டதாகவும் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker