Latestமலேசியா

வரலாறு காணாத புகை மூட்டம்: 2,000 பள்ளிகள் மூடல் – 2 மில்லியன் மாணவர்களின் கல்வி பாதிப்பு

கோலாலம்பூர், செப். 19 – பெரும்பாலான மாநிலங்களில் கடுமையான புகை மூட்டத்தினால் 2000 பள்ளிகள் மூடப்பட்டு, இரண்டு மில்லியன் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர், புத்ரா ஜெயா, கோலாலம்பூர், பினாங்கு, கெடா, பேரா, நெகிரி செம்பிலான் மற்றும் சரவாக்கில் 2,459 பள்ளிகள் இன்று மூடப்பட்டன.

பள்ளிகள் மூடப்பட்டடால் 1,732,842 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. கெடா, பேராக், நெகிரி செம்பிலான் மற்றும் சரவாக்கின் பள்ளிகள் இன்று, வியாழக்கிழமை மட்டும் மூடப்படும் வேளையில், சிலாங்கூர், புத்ரா ஜெயா, கோலாலம்பூர் மற்றும் பினாங்கின் பள்ளிகள் இன்றும் நாளை, வெள்ளிக்கிழமையும் மூடப்படும்.

சிலாங்கூரில் அதிகமாக, 939 பள்ளிகளின் 911,974 மாணவர்களின் கல்வி பாதிப்படைந்திருக்கும் வேளையில், பினாங்கில் 399 பள்ளிகளின் 243,972 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்ரா ஜெயாவில் 25 பள்ளிகள் மூடப்பட்டு 27,531 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பேராவில் 250 பள்ளிகளும் கெடாவில் 124 பள்ளிகளும் இன்று மட்டும் மூடப்படும். நெகிரி செம்பிலானில் குறைந்த எண்ணிக்கையிலான 53 பள்ளிகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker